Wednesday 5 October 2011

புத்தன்துரை கலவரம் !

அப்போது....
                                            காவல்  கண்காணிப்பாளர்  திரு  வாசுதேவ  பாட்  அவர்கள் மிகவும்   நல்லவர் . " நீங்கள்  அனைவரும்   திருநெல்வேலி   மாவட்டம்தானே  யாருக்காவது   குறிப்பிட்ட ஏதாவது   காவல்நிலையம்  வேண்டுமா ?" என்று  கேட்டார்கள் .  யாரும்  குறிப்பிட்டு   எதுவும்  கேட்கவில்லை . 

                          மறுநாள்   காலையில்   போஸ்டிங்  ஆர்டர்  கொடுத்தார்கள் .  எனக்கும்   திரு சக்திவேல்  பிள்ளைக்கும்   புதுக்கடை   காவல்  நிலையம் , பி.எஸ்.சுப்பையாவுக்கு   அருமனை ,  மனுவேல்  பூபாலராயருக்கு   கொல்லன்கோடு   கவல்நிலயமும்   போடப்பட்டிருந்தது .   அடுத்த  நாளே   டுட்டியில் சேரவேண்டும்   என்றும்   அந்த    ஆர்டரில் இருந்தது .   மறுநாளே   புதுக்கடை காவல்நிலையம் போய் நானும்   திரு சக்திவேல் பிள்ளையும்   டுட்டிக்கு   சேர்ந்தோம் .  சப்  இன்ஸ்பெக்டர்   திரு எம்.சங்கரபாண்டியன்   அவர்கள் அவரது  சொந்த  ஊர்   திருநெல்வேலி மாவட்டம்   சங்கரன்கோயில்   பக்கமுள்ள   குருக்கல்பெட்டி என்பதை  பின்னால்   தெரிந்துகொண்டேன் .  தலைமை  காவலர்கள்   திருவாளர்கள்   விஸ்வம்பர  நாயர் ,  விக்கன்  பாஸ்கரன் , ராமன்  நாயர் , தாமரைகுளம்   திரு  தாண்டவன் ,  ஸ்டேஷன் ரைட்டர்  திரு நடராசன் காவலர்கள்  திட்டுவிளை  முஸ்தபா ,  திருப்பதிசாரம்   பாவெல் , இரேநிபுரம்   பொன்னையா  நாடார் , முருகன் , ராஜசேகரன்   மற்றும்  பலர் .  எல்லோரும்  எனக்கு  மிகவும்   நல்ல நண்பர்கள்  . எல்லோரும்   ஒற்றுமையுடன்   பணிபுரிந்தோம் .

கால்சட்டை இல்லாமல் நடந்து சென்றது !


                            கடலூரில்  சொன்னதுபோல் இங்கு காவலர்களுக்கென்று   வீடு  எதுவும் கிடையாது .  நானும்   திரு சக்திவேல் பிள்ளையும் ஒரு  வீட்டு  மாடியில்  ஒரு அறையில்   இருவரும்   வாடகைக்கு   தங்கியிருந்தோம் .  டுட்டியில் மிகவும் உஷாராகவும்   சரியாகவும்  இருப்போம். சரியான  நேரத்தில்   டுட்ட்டிக்கு   சென்றுவிடுவேன் .  ஒருநாள்   நேரமாகிவிட்டது.   அவசரமாக   புறப்பட்டேன் .   

                         அந்தகாலத்தில்   காவலர் யூனிபோர்ம்    எப்படிஎன்றல்   அண்ட்ராயர்  மாதிரி   ஒரு காக்கி  அரைகால்  சட்டை   காலர்   இல்லாத   காக்கி முழுக்கை  சட்டை. இடுப்பில்   மேல்சட்டைக்கு  மேல  மூன்று   இன்ச்   அகலமுள்ள  பெல்ட்  .  காலில்  சாக்ஸ்   அதற்குமேல்   ஹோச்ச்டப்  கால்  முட்டிவரையில்   போட்டு    காலில் உள்ள ஷூவின்  மேல்பகுதியும்   ஹோச்ப்பையும்   இணைத்து   ஒரு பட்டி என்ற   ஒரு நீளமான   நாலு  இன்ச் அகலமுள்ள உல்லன் துணியை   (பட்டி) சுற்றவேண்டும்.  தலையில்   அந்தகால   உயரம்  நீளமான   தொப்பி .  

வீதியில் நடந்தேன் !

                     அன்று   நான்   எல்லாம்  போட்டுவிட்டேன். ஆனால் உள்ளாடை போட்டுகொண்டு அரைக்கால்  சட்டை  மட்டும்  போடா  மறந்துவிட்டேன்  .  அவசரமாக  வேகமாக   பஜாரில்   நடந்து  வந்தேன் . பஜாரில்   உள்ள கடைகளில்  இருப்பவர்கள்   அனைவரும் என்னை  பார்த்து   பார்த்து சிரிக்கிறார்கள் .  எனக்கு   ஒன்றுமே  புரியவில்லை .  பத்து    கடைகள்   நடந்து வந்தபின்பு   நண்பர்   சலூன்  கடை   சதாசிவம் " சார்  கடைக்குள்ள   வாங்க " என்றார் . "ஏன்   கால்சட்டை  போடவில்லை   என்று அவர்  சுட்டி  காட்டியபின்புதான்   எனக்கு தெரிந்தது  . அதன்   பிறகுதான்  எனக்கு வெட்கமாக இருந்தது .  உடனே   சட்டையை   கழட்டிவைத்துவிட்டு சலூன் கடையிலுள்ள  துணியை வாங்கி  வசதியாக   கட்டிக்கொண்டு    திரும்ப   எனது   அறைக்கு   ஓடினேன் .   அதன்பின்பு   அரைக்கால் சட்டையை அணிந்துகொண்டு   காவல்நிலையத்துக்கு   போனேன் .

புத்தன்துரை கலவரம் !
    
                             தேங்காபட்டணம் அருகில்  இணையம்  புத்தன்துரை   என்ற ஊரில்  அடிக்கடி   அங்குள்ள  ஆர் . சி   சாமியார்  கோஷ்டிக்கும்   ஊரிலுள்ள    மற்றவர்களுக்கும் சண்டை  வந்துகொண்டே   இருக்கும் . அதனால்   அங்கு  எப்பொழுதும்   இரண்டு   காவலர்கள்   பாதுகாப்பு  பணியில்  இருப்பார்கள் . நானும்  அந்த பாதுகாப்பு பணிக்கு   போவேன் .  அங்கு  போகும்போது   தேங்காபட்டணம் வரை   பஸ்ஸில்   சென்று   அப்பால்  நடந்து ராமன்துறை  என்ற ஊர் வழியாக   போகவேண்டும் . அப்படி  போகும்போது ராமன்துரையில் வழிமேல் உள்ள அவ்வூர்  கணக்கபிள்ளை வீட்டில்   சற்று   இருந்து இளைப்பாறிவிட்டு  செல்வேன் .  அதனால் அந்த வீட்டில் உள்ளவர்கள்  அனைவரும் நன்கு  பழக்கமாகி  விட்டார்கள் . 

ரோஸ் மேரி!

                          கணக்குபிள்ளையின்  மகள்  ரோஸ்மேரி   ஆசிரியை  பயிற்சி  முடித்து தக்கலை அருகில்   செம்பருத்திவிளை என்ற ஊரில்  டீச்சராக   பணிபுரிந்து  வருகிறாள் .   அவர்களுக்கு  நெருங்கிய   சொந்தக்காரர்   திரு ஜோசப்   என்பவர்   தூத்துக்குடியில்   நீதிபதியாக  இருந்தார் .  நான் ஊருக்கு  போகும்போதெல்லாம்   அவரை  பார்த்துவிட்டு   வருவேன் .   சில  நேரம்  அவர் எதாவது   என்னிடம் சொல்லியனுப்புவார்  .  அதை  நான் ராமன்துறை கணக்குபிள்ளை  வீட்டில் வந்து  சொல்லுவேன் .  நான் டுட்டியில் இருக்கும்போது   கடற்கரையில் மீன்  வாங்கி இவர்கள்   வீட்டில் கொடுத்துவிட்டால்   நன்கு பொறித்து   தருவார்கள் . இப்படியாக  அந்த  வீட்டிலுள்ளவர்களுக்கும் எனக்கும்    நல்ல பழக்கம் ஏற்பட்டது .   அவர்கள்   பொறித்து தரும்  மீனை  வாங்கிகொண்டு   ஹோட்டலில்  வைத்து  நானும்  என்னுடன்  பணியிலிருக்கும்   காவலரும்  சேர்ந்து  சாப்பிடுவோம் .   

                        நாளடைவில்   புதுக்கடையில்   தனியாக  ஒரு வீடுபார்த்து ஊரில்போய் அம்மாவையும்   தங்கை   பாப்பாவையும்   கூட்டிவந்தேன் .  தம்பி   ராமலிங்கம்   குறிஞ்சிப்பாடியில்   இருக்கும்போது   உடல்  நலம்   பாதிக்கப்பட்டு   வேலையை  விட்டு ஊருக்கு வந்துவிட்டான்  . அங்கே ரயில்வேயில் கேங்  கூலியாக   வேலைபார்த்து  வந்தான் .  எந்தெந்த ஊரில் வேலை  நடக்கிறதோ   அங்கேயே   தங்கிகொள்வான் .

கலவரம்!

                           ஒருநாள்   புத்தன்துரை ஊரில் கலவரம்  வெடித்தது. இரண்டு   கோஷ்ட்டிக்கு பயங்கர சண்டை .  பாதுகாப்பு  பணியிலிருந்த   காவலர்களுக்கும்   அடிவிழுந்தது .  அன்று நான் பணியிலில்லை . காவலர்  முஸ்தபா  என்பவரும்  ஒரு வயதான   காவலரும் பணியிலிருந்தார்கள்.   அந்த ஊரில் போன்  வசதியும்   கிடையாது . கடற்கரையில் சண்டை நடக்கிறது.   காவலர் முஸ்தபா தொப்பியை கலவரக்காரர்கள்   பிடுங்கி  கடலிலே  வீசிவிட்டார்கள் .  காவலர் முஸ்தபா ரோடு  பக்கம்  வந்து பஸ்  , கார் , லாரி   ஏதாவது வருகிறதா   என்று பார்த்திருக்கிறார்.   

                        சிறிது  நேரத்தில் தேங்காபட்டினம் சாஹிப்  கார் வந்துள்ளது . சாதாரணமாக   முஸ்லிம்   காரில்  கொசபெண்கள் வரும்போது   மற்றவர்களை   காரில் ஏற்றமாட்டார்கள்.  ஆனால் முஸ்தபாவை   அவருக்கு  நன்றாக  தெரியும் . அதனால் காரை நிறுத்தி  உனக்கும்   காயம்  உள்ளதா  என்று கேட்டு  அவரை காரில்  ஏற்றிக்கொண்டு  தேங்காபட்டினம்  வந்துள்ளார் .   அங்கே வந்தபின்புதான் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்   காவல்நிலையத்தில்  ஒரு காவலரைமட்டும்  வைத்துவிட்டு    நாகர்கோயில்   காவல் கண்காணிப்பாளர்   அலுவலகத்திற்கு   தகவல் கொடுத்துவிட்டு நாங்கள் எல்லோரும்   புத்தந்துரைக்கு  சென்றோம் .  அங்கே சென்ற பின்பு தான் ஒரு கலவரம் எவ்வளவு பாதிப்பை உண்டாக்கும் என்பதை அறிய முடிந்தது.
                                                                                         அங்கே............

2 comments:

  1. "அங்கே சென்ற பின்பு தான் ஒரு கலவரம் எவ்வளவு பாதிப்பை உண்டாக்கும் என்பதை அறிய முடிந்தது."

    கலவரம் என்றாலே பாதிப்பு தான்...

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  2. அன்புள்ள அப்பாவிற்கு !

    அண்ணா அரசுவின் அன்புக்குரிய வணக்கங்கள்!

    எங்கள் கல்லூரி விடுதிக்கு நீங்கள் வந்தபோதெல்லாம் M.K.விடம் மட்டுமல்லாமல் அனைவரிடமும் ஒரு தந்தைக்கே உரிய பாசத்தையும் அன்பையும் காட்டும்போதெல்லாம், நான் அதுவரை கேள்விப்பட்ட காவல் துறை அதிகாரிக்கே உரித்தான சிடுசிடுப்பு தங்கள் முகத்தில் சிறிதளவு கூட இல்லாதது கண்டு எனக்குள்ளே வியப்பேன் !

    தற்போது தங்களின் வலைத்தொடரை படித்தவுடன் நீங்கள் கடந்து வந்த கல்லும் முள்ளும் நிறைந்த கடினமான பாதை உங்களை நன்கு பக்குவப்படுத்தி உள்ளது என்பதையும், தங்களின் பாலைவனப் பாதையில் அவ்வப்போது அன்பெனும் நீரைத்தந்தவர்களிடமிரிந்து நீங்கள் கற்றறிந்த மனிதாபிமானம் எனும் ஈர குணமே நீங்கள் அவ்வாறு கனிவாக நடக்க காரணம் என்பதையும் உணர்ந்தேன். நிச்சயம் நீங்கள் கைதிகளையும் மனித உரிமை மீறாமல் நடத்தி இருப்பீர்கள் என்பதும் உறுதி!

    அம்மாவைப் பிரிந்து வாடும் கன்றுகளுக்கு தங்களின் வாழ்கைத்தொடர் அரும்பாலாய் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

    ReplyDelete